கிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு மிரட்டல் !! வடஇந்திய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலையெடுக்கிறதா ??

By Asianet TamilFirst Published Aug 20, 2019, 12:25 PM IST
Highlights

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கு கேட்ட பணத்தை கொடுக்காத கடை வியாபாரியை இந்து அமைப்பினர் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூர் , முதலிபாளையம் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் . இதற்காக அந்த பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்து விழாவினை அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் நடத்தி வருகிறார்களாம் .

இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கு இந்து அமைப்பினர் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் . அந்த பகுதிகளில் இருக்கும் கடைகளில் பணம் வாங்கி உள்ளனர் . அப்போது சிவா என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடையில் நன்கொடை கேட்டிருக்கின்றனர் . அவரும் 300 ரூபாய் நன்கொடையாக தருவதாக கூறியுள்ளார் . 

அதனை ஏற்காத இந்து அமைப்பினர் " 300 லாம் தேவ இல்ல .. 1000 ரூபா கொடு ஒழுங்கா " என்று மிரட்டி உள்ளனர் . அதை கொடுப்பதற்கு சிவா மறுத்து இருக்கிறார் . இதனால் ஆத்திரம் கொண்ட இந்து அமைப்பினர் சிவாவை தாக்கியுள்ளனர் .அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இவை அனைத்தும் அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது . அதை வைத்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சிவா . அதனடிப்படையில் வசந்த் , விக்னேஷ்,உள்பட 5 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது .

பொதுவாக இது போன்ற சம்பவங்கள் எல்லாம் வடஇந்தியாவில் தான் நடைபெறும் . தற்போது தமிழ் நாட்டிலும் இந்த கலாச்சாரம் உருவாகிறதோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது .

click me!