தந்தை கண்முன்னே பயங்கரம்... தலை நசுங்கி உயிரிழந்த பெண் டாக்டர்..!

Published : Jul 13, 2019, 11:49 AM ISTUpdated : Jul 13, 2019, 04:24 PM IST
தந்தை கண்முன்னே பயங்கரம்... தலை நசுங்கி உயிரிழந்த பெண் டாக்டர்..!

சுருக்கம்

தாராபுரம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தையுடன் சென்ற பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தையுடன் சென்ற பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது மனைவி குப்பாத்தாள். மகள் லாவண்யா (24) பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். தினமும் தாராபுரம் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி சென்று வந்தார். இவரது தந்தை பழனிசாமி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து தனது ஸ்கூட்டியில் அழைத்து வருவார். வழக்கம்போல் வேலை முடிந்து லாவண்யா பேருந்தில் வந்து இறங்கினர். 

சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பழனிச்சாமி மகளை தனது ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் சிறிதுதூரம் சென்றபோது எதிரே குடிபோதையில் 2 இளைஞர்கள் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பழனிசாமி ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. 

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 இளைஞர்கள் மற்றும் பழனிசாமி சுதாரித்து எழுந்தனர். மருத்துவர் லாவண்யா ரோட்டில் இருந்து எழுவதற்குள் அந்த வழியாக வந்த லாரி லாவண்யாவின் தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தன் கண்முன்பாக மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை பார்த்து பழனிச்சாமி மயங்கி சரிந்தார். உடனடியாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஒன்றுகூடி இளைர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆனைகட்டியை சேர்ந்த மருத்துவர் ரமேஷ் என்பவர் தனது மனைவி ஷோபனாவுடன் பள்ளிக்கு சென்ற மகளை அழைத்து வர ஸ்கூட்டியில் சென்றார். அப்போது குடிபோதையில் வந்த 2 இளைஞர்கள் இவர்கள் மீது மோதியதில் ஷோபனா தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!