திருப்பூரில் பயங்கரம்! 50க்கும் மேற்பட்ட துணிக்கடையில் தீ விபத்து! 8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!

By vinoth kumar  |  First Published Jun 24, 2023, 8:19 AM IST

பனியன் தொழிலுக்கு பெயர் போன திருப்பூரில் உள்ள காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதி உள்ளது. இங்கு தற்காலிக ஷெட்டுகளில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து கடைகளில் பரவியது. 

திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பனியன் பஜாரில் ஏற்பட்ட  50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடைகள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பனியன் தொழிலுக்கு பெயர் போன திருப்பூரில் உள்ள காதர் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதி உள்ளது. இங்கு தற்காலிக ஷெட்டுகளில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து கடைகளில் பரவியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பீர் 2க்கு 1 இலவசம்! பீரில் கிடந்த அழுக்கு பேப்பர்! அப்படித்தான் இருக்கும் என ஊழியர் எகத்தாளம்!

இந்த விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  பலாத்கார முயற்சி! இறுதி வரை போராடிய இளம்பெண்! கடுப்பில் ஓடும் ரயிலில் தூக்கி வீசிய கொடூர கும்பல்..

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட தீ , மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. 

click me!