வேலை வாங்கித் தருவதாக கூறி 6 லட்சம் மோசடி செய்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
பல்லடம் தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானாம்பாள். இவர் கடந்த ஜனவரி மாதம் அவரது மகன் வேலைக்காக அதே பகுதியைச் சேர்ந்த 4வது வார்டு உறுப்பினர் முனியான் என்பவரை அனுகியுள்ளார். திமுகவைச் சேர்ந்த முனியான் என்பவர் VAO உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது அமைச்சரின் உதவியாளரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளருமான குகனிடம் அழைத்துச் சென்று ஆறு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வெளியான பணியாளர் பட்டியலில் ஞானாம்பாளின் மகனின் பெயர் இடம்பெறவில்லை. வேலை கிடைக்காகததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
என்னுடைய பசு மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழி.. கைதான விவசாயி பகீர் தகவல்..!
மேலும் பணம் கேட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டி வருவதாகவும் தங்களுக்கு உரிய பாதுகாப்பும் மேலும் தாங்கள் கொடுத்துள்ள 6 லட்சம் பணமும் திரும்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். திமுக அமைச்சர் உதவியாளரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.