கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அவ்வழியாக சென்ற பேருந்து, லாரிகள் மோதியதில் உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு காளிவேலம்பட்டி என்ற இடத்தில் கொங்கு திருமண மண்டபத்தின் முன்பு உள்ள கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் இருந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பேருந்து, லாரிகளை மரித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அந்த வாலிபர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். இரவில் வெளிச்சம் அதிகம் இல்லாததால் உயிரிழந்து சாலையில் கிடந்த அந்த வாலிபரின் சடலத்தின் மீது சுமார் 6 நிமிடத்திற்கு மேலாக பேருந்து, லாரி, கார் என அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சடலத்தின் மீது ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
undefined
கோவையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மின்சார வாகனங்களின் அணிவகுப்பு
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் காவல் துறையினர் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வாலிபர் யார் என்பது குறித்தும் பல்லடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.