பல்லடம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். காதலிப்பதாகக் கூறிவிட்டு திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த போது பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 24) என்பது தெரிய வந்தது.
undefined
காதலியின் திருமணத்தை நிறுத்த காதலியின் தந்தையை கத்தியால் குத்திய காதலன்
யுவராஜ் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராமல் பாலியல் இச்சையை வெளிப்படுத்திய உறவினர்; கோவையில் பரபரப்பு