தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் மருத்துவர் மீது அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 50). இவர் மருத்துவம் படிக்காமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மருத்துவ ஊரக நற்பணிகள் துறை இணை இயக்குநர் கனகரணி தலைமையில் மருத்துவத்துறையைச் சார்ந்த அதிகாரிகள் அருண் பாபு, கண்காணிப்பாளர் ஹரி, கோபாலன் ஆகியோர் தாசன்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனலட்சுமியின் கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
undefined
மோடி என்ன பண்றாருனு அவருக்கே தெரியாது... ஆனால் திமுக இரு தேர்தல்களையும் சந்திக்க தயார் - துரைமுருகன்
அப்போது தனலட்சுமியிடம் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், அந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். அதன் பின்னர் கடந்த 1ம் தேதி கல்வி சான்றிதழ் உடன் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி விவரத்தை கூறிவிட்டு சென்றார்.
இது குறித்து விசாரணை நடத்திய இயக்குனர் கனகராணி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் அறிக்கை சமர்ப்பித்தார். விசாரணையில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் கனகராணி அலங்கியம் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவி பலி; வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் சோகம்?
புகாரின் அடிப்படையில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் போலி பெண் மருத்துவர் தனலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த தனலட்சுமி தலைமறைவானார். தலைமறைவான தனலட்சுமியை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் போலி பெண் மருத்துவர் தனலட்சுமி இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.