திருப்பூரில் ஆயில் மில் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் கொள்ளை

By Velmurugan s  |  First Published Aug 31, 2023, 7:57 PM IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆயில் மில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 25 பவுன் நகை மற்றும் 5லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தம்ம ரெட்டிபாளையம் கிராமம் சாவடிப்பாளையத்தில் ஆரோக்கியா தேங்காய்  எண்ணெய் ஆலை உள்ளது. இந்த எண்ணெய் ஆலையின் உரிமையாளரான குணசேகர் வழக்கம் போல் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கியுள்ளார். வீட்டில் குணசேகரன், அவரது மனைவி செல்வி, மகன் தனுஷ், நிதஷன் ஆகியோர் இருந்துள்ளனர்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அடையாளம் தெரியாத 7 நபர்கள் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். முகமூடி அணிந்த நபர்கள் வீட்டில் இருந்தவர்களை  கத்தியை காட்டி மிரட்டி ஒயர் மற்றும் சேலையால் அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூச்சலிடாதபடி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

கிறிஸ்தவ கல்லூரிக்குள் சென்று விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு வாக்குவாதம்

அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டின் பீரோவில் இருந்த நகை உட்பட 25 சவரன் மற்றும் பணம் ரூபாய் 5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்று விட்டனர். முகமூடி அணிந்து வந்த நபர்கள் தமிழ் மற்றும் கன்னடத்தில் பேசியதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து காங்கேயம் காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எண்ணெய் ஆலை உரிமையாளரின் வீட்டில் 7 பேர் புகுந்து 25 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!