பிரேமுக்கும், நிரோஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து இருவீட்டாரும் இவர்களை கண்டித்துள்ளனர். இதனால், இருவரும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (38). திருமணமாகவில்லை. இவர் தனது தாயார்அன்னலட்சுமியுடன் வசித்து வந்தார். மேலும் பிரேம்குமார் தான் குடியிருக்கும் வீட்டில் சிறிய பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது பனியன் நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி கார்த்திகை செல்வன் என்பவரின் மனைவி நிரோஷா(30) தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமண ஆகி 13 வயதில் ஆண் குழந்தை, 9 வயதில் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், பிரேமுக்கும், நிரோஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து இருவீட்டாரும் இவர்களை கண்டித்துள்ளனர். இதனால், இருவரும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை பிரேம்குமாரின் தாயார் வெளியே சென்று விட்டார். பிரேம்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இரவு அன்னலட்சுமி வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கேட் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பிரேம்குமாரை அழைத்த போது உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது உள்ளே பிரேம்குமாரும், நிரோஷாவும் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.