திருப்பூர் அருகே கொரோனா தொற்றால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே கொரோனா தொற்றால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளரிவெளி பகுதியை சேர்ந்த தெய்வராஜ் ( 42). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை சென்று வந்துள்ளார். பின்னர், தெய்வராஜ் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
undefined
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தெய்வராஜ் கடந்த 9ம் தேதியும், சாந்தி 16ம் தேதியும் உயிரிழந்தனர். பின்னர், தெய்வராஜின் அண்ணன் ராஜா (50), தம்பி சௌந்தரராஜனுக்கும் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து, ராஜா ஊத்துக்குழியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், செளந்தரராஜன் திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜாவும், அவரை தொடர்ந்து நேற்று சௌந்தரராஜனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து, அந்த பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன். மேலும், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.