சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாய் மற்றும் பாட்டி கஞ்சா வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாய் மற்றும் பாட்டி கஞ்சா வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரும் பழனி கல்லூரியில் படித்து வந்த கவுசல்யா என்பவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பொதுமக்கள் மத்தியில் கவுசல்யாவின் உறவினர்களால் ஓட ஓட விரட்டி சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
undefined
இந்த வழக்கில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குதண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கவுசல்யா தனியாக வசித்து வந்தார். பின்னர், நிமிர்வு கலையகம் பறை இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான சக்தியை காதலித்து கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் கஞ்சா வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி அருகில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராமன் என்பவரது மனைவி கோதையம்மாள் (70) என்பவர் 1.750 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது மகளான சின்னச்சாமி மனைவி அன்னலட்சுமி(42) கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் கோதையம்மாளையும், அன்னலட்சுமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.