அதிர்ச்சி செய்தி... கொரோனாவில் இருந்த மீண்ட பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jul 21, 2021, 7:29 PM IST
Highlights

கொரோனாவில் மீண்ட பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனாவில் மீண்ட பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் திருமுருகன் பூண்டியை சேர்ந்தவர் கலாவதி (52). இவர் ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மே 5ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், கொரோனா தொற்றில் மீண்ட அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது, இதனையடுத்து, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போது கலாவதி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கலாவதிக்கு ஒரு கண் அகற்றப்பட்டது. 

தொடர்ந்து  சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பு பூஞ்சையால் தாசில்தார் கலாவதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!