அதிகாலை 3 மணியளவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதுகுறித்து உடனடியாக மோகனுக்கு தகவல் அளித்தார். கார் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக கார் முற்றிலும் எரிந்து முடிந்தது.
திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர் இந்து முன்னணி அமைப்பில் திருப்பூர் கோட்ட செயலாளராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் ஒன்று ஒன்றுள்ளது. கட்சி நிகழ்வுகளுக்கும் வெளியிடங்களுக்கும் தனது காரில் சென்று வருவது இவரது வழக்கம். காரை எப்போதும் தனது வீட்டு வாசல் அருகே நிறுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது.
undefined
நேற்றும் வெளியே சென்று விட்டு வந்தவர் இரவு தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். அதிகாலை 3 மணியளவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதுகுறித்து உடனடியாக மோகனுக்கு தகவல் அளித்தார். கார் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக கார் முற்றிலும் எரிந்து முடிந்தது. பின் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தகவலறிந்து வந்த காவலர்கள் தீ வைப்பு சம்பவம் குறித்து அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கார் தீ வைக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் மோகன் வீட்டு முன்பு திரண்டனர். தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி போராட்டம் நடத்திய அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.