திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
திருப்பூர் அருகே அதிகாலையில் காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
undefined
இதையும் படிங்க: ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா?அப்படினா சென்னையில் இருந்து உங்க ஊருக்கு போகும் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?
இந்த கோர விபத்தில் சந்திரசேகர்(60) , சித்ரா(57) , இளவரசன்(26), அரிவித்ரா(30) மற்றும் மூன்று மாத பெண் குழந்தை சாக்சி ஆகியோர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்து அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: TNPSC Group 2A Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க...
மேலும் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் - சித்ரா தங்களது 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.