திருப்பூரில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக சிலிண்டராக மாற்றும் போது தீ விபத்து

By Velmurugan s  |  First Published Apr 4, 2024, 5:15 PM IST

பல்லடம் அருகே சட்டவிரோதமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக சிலிண்டர்களாக மாற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் கயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முருகன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர் உருளைகளை வாங்கி அதை வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சிலிண்டர் உருளைகளில் சட்ட விரோதமாக எரிவாயுவை நிரப்பி உணவகம் போன்ற கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 

அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் களம்; 12ம் தேதி கோவையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின்

Tap to resize

Latest Videos

இவர் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டை சட்டவிரோதமாக சிலிண்டர் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் இருந்தபோது சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டதில் ஒரு சிலிண்டர் மட்டும் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டின் மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக மற்ற சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

மாட்டு வண்டியில் சென்று ஸ்கோர் செய்ய நினைத்த தேமுதிக வேட்பாளர்; மாடு மிரண்டதால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

இந்த விபத்தில் காயம் அடைந்த முருகன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த மற்ற சிலிண்டர் உருளைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!