திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் கணேசன். வழக்கம் போல இன்று காலை அவர் வங்கிக்கு வந்தார். பின்னர், வங்கி ஊழியர்கள் உணவருந்தும் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவிநாசில் உள்ள கனரா வங்கி அலுவலகத்திலேயே உதவியாளர் கணேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் கணேசன். வழக்கம் போல இன்று காலை அவர் வங்கிக்கு வந்தார். பின்னர், வங்கி ஊழியர்கள் உணவருந்தும் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணம் கையாடல் புகார் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், வங்கியில் பணம் செலுத்த வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வங்கி ஊழியர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.