அதிகாலையில் கோர விபத்து..! அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 20 பேர் உடல் நசுங்கி பலி..!

By Manikandan S R S  |  First Published Feb 20, 2020, 9:52 AM IST

திருப்பூர் அருகே இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் 20 பேர் பலியாகினர்.


பெங்களூரில் இருந்து  கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது அதே சாலையின் எதிரே கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

Tap to resize

Latest Videos

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்து சுக்குநூறாக நொறுங்கி அதில் பயணம் செய்த பயணிகள் 13 ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில பலியானவர்களின் உடல்கள் முற்றிலும் சிதைந்து போயிருப்பதால் அவர்களை அடையாளம் காண  முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க: மனதை உலுக்கும் காட்சிகள்.. 22 பேர் உயிர் காவு.. அதிகாலையில் நடந்த கோர விபத்து..! வீடியோ

click me!