திருப்பூர் அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலியாகி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளயத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(30). இவரது மனைவி பாண்டியம்மாள்(25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை வரம் வேண்டி கணவனும் மனைவியும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளனர். அதற்கு பலனாக அமைத்ததுபோல 5 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனிஷ்கா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
undefined
நீண்டநாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்ததால் கணவன் மாணவி இருவரும் அதன்மீது அதீத பாசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாண்டியம்மாள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பின் துணி துவைப்பதற்கு துணி எடுப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் கையை நனைத்து விளையாட தொடங்கியுள்ளது. எதிர்பாராத விதமாக வாளிக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
குழந்தை வெளியே வரமுடியாமல் உள்ளேயே மயங்கியது. சிறிது நேரத்தில் அங்கு வந்த பாண்டியம்மாள் குழந்தை தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பேச்சு மூச்சின்றி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.அதைக்கேட்டு பாண்டியம்மாள் கதறி துடித்தார்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு செல்லப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read: ஓ.பி.எஸ் மகன் கார் மீது சரமாரி தாக்குதல்..! தேனியில் பரபரப்பு..!