ஒரே நாளில் அடுத்த பயங்கரம்..! மீண்டும் ஒரு குழந்தை பரிதாப பலி..!

Published : Jan 24, 2020, 06:28 PM IST
ஒரே நாளில் அடுத்த பயங்கரம்..! மீண்டும் ஒரு குழந்தை பரிதாப பலி..!

சுருக்கம்

தண்ணீர் நிரப்பிய வாளியில் விளையாடிக்கொண்டிருந்த ஜெகத் எதிர்பாராத விதமாக அதனுள் தவறி விழுந்தான். வெளியே வர தெரியாமல் முனங்கிய குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியுள்ளது. தொட்டிலில் குழந்தை தூங்குவதாக நினைத்து பார்க்க வந்த மோகனா குளியலறையில் ஜெகத் மயங்கி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

திருப்பூர் பல்லடம் அருகே இருக்கும் வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. இந்த தம்பதியினருக்கு ஜெகத் என்று ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருந்து வந்துள்ளது. பிரபாகரன் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல அவர் தனது பணிக்கு சென்று விட்டார். வீட்டில் மோகனாவும் குழந்தை ஜெகத்தும் மட்டும் இருந்துள்ளனர்.

மோகனா சமயலறையில் வேலைபார்த்து கொண்டிருந்தார். குழந்தை ஜெகத் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். திடீரென விழித்த ஜெகத் தொட்டிலில் இருந்து இறங்கி குளியலறைக்கு சென்றுள்ளான். அங்கு தண்ணீர் நிரப்பிய வாளியில் விளையாடிக்கொண்டிருந்த ஜெகத் எதிர்பாராத விதமாக அதனுள் தவறி விழுந்தான். வெளியே வர தெரியாமல் முனங்கிய குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியுள்ளது. தொட்டிலில் குழந்தை தூங்குவதாக நினைத்து பார்க்க வந்த மோகனா குளியலறையில் ஜெகத் மயங்கி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்லடத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை மோகனா கொண்டு சென்றார். அங்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மோகனா கதறி துடித்தார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

நேற்று தான் திருப்பூரில் கண்ணன் என்பவரின் ஒரு வயது குழந்தை கனிஷ்கா தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது மீண்டும் ஒரு குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சுத்திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோர்களின் கவனக்குறைவால் அடுத்தடுத்து நிகழும் குழந்தைகள் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!