திருப்பூரில் காவல்துறையினருக்கு போக்கு காட்டி தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைது

By Velmurugan s  |  First Published Feb 20, 2023, 5:07 PM IST

திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜ்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்து வரும்போது தப்பி ஓடிய கைதியை காவல் துறையினர் இன்று மீண்டும் கைது செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தாலிப்ராஜா. இவர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிவையில் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக தாலிப்ராஜா கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில் இருந்து தாலிப்ராஜா உள்ளிட்ட மூன்று கைதிகளை ஆயுதப்படை காவல் துறையினர் பாதுகாப்புடன் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கடந்த 7ம் தேதி பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக கைதிகளை திருப்பூர் ஆயுதப்படை நிலையத்திற்கு பேருந்தில் கோவைக்கு அழைத்து வந்தனர். ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்பொழுது காவலர் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு திடீரென  அரசு பேருந்து ஜன்னல் வழியாக  குதித்து தாலிப்ராஜா தப்பி ஓடிவிட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

திண்டுக்கல்லில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

பாதுகாப்புக்காக வந்த காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். ஆனால் பிடிபடவில்லை. இது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தாலிப்ராஜாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. கைதி தப்பி ஓடியதை தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் ஐந்து பேரிடம்  தீவிர விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில் கைதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆசிரியர்

click me!