
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் பண்டியன் (வயது 23), விஜய் (24). திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த ஓருவருட காலத்திற்கும் மேலாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வார விடுமுறை தினம் என்பதால், இவர்கள் இருவரும் ரயில் முன் செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் கூறிச் சென்றனர். திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மது போதையில் வந்த இருவரும் தண்டவாளம் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
தேனியில் பரபரப்பு; விசாரணைக்கு சென்ற காவலரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த எர்ணாகுளம் - பிலாஸ்பூர் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி பலி - மருந்தகத்திற்கு சீல்
அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த ரயில்வே காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை்ககாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.