திருப்பூர் அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பெண்கள் காயமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஐந்து வேன்களில் 100க்கும் மேற்பட்டோர் சீர்காழியில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு கோவையில் உள்ளி பிரபல யோகா மையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். வேன் ஒட்டன்சத்திரம் முதல் அவிநாசிபாளையம் நான்கு வழிச்சாலை வழியாக வந்து கொண்டிருந்த.
அப்போது ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலைக்கடை அடுத்த மோதுப்பட்டி பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
எடப்பாடி முதல்வராவதை எந்த கொம்பனாளும் தடுக்க முடியாது - முன்னாள் அமைச்சர்கள் பேச்சு
விபத்தை நேரில் பார்த்த விவசாயி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து நான்கு 108 ஆம்புலன்ஸ், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் 16 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்