மெயின் அருவி தடாகத்தில் உள்ளிழுக்கும் மர்மம் !! குற்றாலத்தில் தொடர்கதையாகும் சம்பவம்

By Asianet Tamil  |  First Published Aug 14, 2019, 11:10 AM IST

குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் விழுந்து பலியாகும் சம்பவம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .


குற்றால அருவிகளில் தற்போது நன்றாக தண்ணீர் விழுகிறது . இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . அப்படி வருபவர்களில் பலர் குளிக்கும் ஆர்வத்தில் முண்டியடித்து செல்கின்றனர் . அப்போது ஆர்ப்பரிக்கும் அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு தடாகத்தில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது .

இது குறித்து காவல்துறையினர் முறையான எச்சரிக்கை செய்தும் சிலர் அதை கண்டு கொள்வதில்லை . இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது .

Tap to resize

Latest Videos

undefined

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சூரியநாராயன் (20) தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு குளிக்க வந்தார் . அவர்கள் அனைவரும் மெயின் அருவியில் இரவு 10 மணிக்கு மேல் குளித்தனர் . பின்னர் ஊருக்கு கிளம்பலாம் என்ற போது சூரியநாராயனை மட்டும் காணவில்லை . பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காத காரணத்தால் அங்கு கண்காணிப்பில்  இருந்த காவல்துறையிடம் புகார் அளித்தனர் .

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மெயின் அருவி தடாகத்தில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதப்பதாக தகவல் வந்தது . விசாரணை செய்ததில் அது காணாமல் போன சூரியநாராயணன் என்று தெரிந்தது .

காவல்துறையினர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

click me!