சங்கரன்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி; 2 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jul 6, 2023, 12:43 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் மகள் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வசூல் செய்யும் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் தனது குடும்பத்தாருடன் நவாச்சோலையில் உள்ள சுடலை மாடன் சாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு தாய் மற்றும் தங்கையை ஏற்றுக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது நீர் இருப்பு பகுதி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முனீஸ்வரின் தாய் மற்றும் சகோதரி படுகாயமடைந்து நிகழ்விடத்தில் துடித்துக் கொண்டு இருந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் முனீஸ்வரன் சடலத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த கனரக வாகனம்; கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் பலி

மேலும் படுகாயம் அடைந்த முனீஸ்வரனின் தாய் மற்றும் சகோதரியை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தலைமறைவு - போலீஸ் வலை வீச்சு

click me!