சின்ன செயின் வேண்டாம் நல்ல பெரிய செயினா எடு; நகைக்கடையில் அலப்பறை செய்த நிர்வாண சாமியார்

By Velmurugan s  |  First Published Jul 5, 2023, 4:51 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிரபல நகைக்கடை ஒன்றுக்க வந்த நிர்வாண சாமியாரை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராஜபாளையம் சாலையில் உள்ள நகை கடைக்கு திடீரென்று ஒரு நிர்வாண சாமியாரும் உடன் மூன்று சாமியார்களும் விஜயம் செய்தனர். வந்தவர்கள் தாங்கள் இமயமலையில் உள்ள ஹரிதுவார் பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆன்மீக சுற்றுலா பயணம் வந்திருப்பதாகவும், வரும் வழியில் தங்களது கடையினை பார்த்ததாகவும், உடன் இறங்கி தங்களை ஆசீர்வதிக்க வந்ததாகவும் கூறினர். நிர்வாண சாமியாரையும், அவரோடு உடன் வந்தவர்களையும் கண்ட கடை உரிமையாளர் மிகுந்த பக்தியுடன் அவர்களை வரவேற்று கடைக்குள் அமரச்  செய்தார்.  

கடை உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நிர்வாண சாமியார் தங்களது பூஜைக்கு தங்களால் இயன்ற பண உதவி செய்யுமாறு கேட்டு, பணத்தினை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ஆசிர்வாதம் செய்யும் தருவாயில் அந்த நிர்வாண சாமியார் உரிமையாளரின் பின்னால் இருக்கும் நகைகளில் ஒன்றை தனக்கு கொடுக்குமாறு கேட்டார். இதனை கேட்ட உரிமையாளர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் முற்றும் துறந்த ஒரு சிவ பக்தராக நினைத்த அந்த நிர்வாண சாமியாரை தற்போது தங்க நகை கொடு என்று கேட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. 

Tap to resize

Latest Videos

undefined

அமைச்சரோடு மாமன்னன் படம் பார்த்த திமுகவினர் ஓசியில் பாப்கார்ன் கேட்டு தகராறு; திரையரங்கில் அடிதடி

இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னிடம் இருக்கும் நகைகளில் ஒரு செயின் ஒன்றை எடுத்து கொடுக்க, அதற்கு அந்த  நிர்வாண சாமியார் இந்தியில் இந்த செயின் வேண்டாம், அந்த செயின் கொடுங்கள் என்று உரிமையாளர் கொடுத்த நகையை விட பெரிய அளவில் செயின் ஒன்றை காட்டியவுடன் பதட்டமாக.. அருகில் இருந்த ஊழியர் சுதாரித்துக்கொண்டு நிர்வாண சாமியாரிடம்  "அது ஆர்டர் செய்து வைத்திருக்கும் நகை வேறொருவருக்கு கொடுக்க வேண்டியது. இப்போதைக்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூற வேறு வழியின்றி அந்த நிர்வாண சாமியார் சுமார் இரண்டு பவுன் மதிப்புள்ள அந்த தங்க நகையை வாங்கிக் கொண்டு கடை உரிமையாளரை ஆசீர்வதித்து விட்டு சென்றார். 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூலம் கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரி

திடீரென்று அந்த கடைக்கு வருகை தந்த நிர்வாண சாமியாரை காண்பதற்கு அங்கு சுற்றி இருந்த பொதுமக்களுக்கு நிர்வாண சாமியார் ஆசிர்வாதம் வழங்கி, விபூதி (அடித்துவிட்டு) பூசிகொண்டு  சென்றார்.

click me!