தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கனரக வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிக்கப்படும் நிலையில், பணம் வழங்காத வாகனங்களுக்கு அபராதம் விதித்து காவலர்கள் அடாவடியில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் எல்லையான தென்காசி மாவட்டம் புளியறையில் காவல் துறைக்கு சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டும். கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் வருவதை தடுக்கும் பொருட்டும் அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனைச் சாவடியில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும், வைக்கோல், காய்கறி, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு வாகனத்திற்கு ஏற்றார் போல் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், வைக்கோல் லோடு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடம் - தேசிய ஆணைய தலைவர் வேதனை
இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் என்பவர் வைக்கல் லோடு ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் இருந்தால் தான் வைக்கோல் லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் அனுமதிக்க முடியும் என்றும் நூறு ரூபாய் கொடுத்த வைகோல் லோடு ஓட்டிச் சென்ற வாகன ஓட்டுநரை உடனடியாக புளியரை காவல்துறை உதவி ஆய்வாளர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்து அவர் மூலமாக அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து விடு கின்ற பணிகளும் நடைபெற்றன.
18 வகையான போட்டி தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி உத்தேச தேதி அறிவிப்பு
காவல்துறை சோதனைச் சாவடியில் மிரட்டும் தொணியில் கேட்ட பணத்தை கொடுக்காத வாகன ஓட்டிகளுக்கு மாற்று ஏற்பாடாக அபராதம் விதிக்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல் துறை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் என்பவர் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை தொடர்ந்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் பணியில் இருந்த காளிராஜ் மற்றும் மகாராஜன் ஆகிய இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.