
திருநெல்வேலி சந்திப்பு அருகே சிந்துபூந்துறையைச் சேரந்தவர் செந்தில் முருகன். இஎஸ்ஐ அலுவலகத்தில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வழக்கம் போல் பணி முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.
காவல்துறையினர் உடையாபட்டி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஹெல்மட் அணியாமல் வந்த செந்தில் முருகன் காவல் துறையை கண்டதும் தீடிரென அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வந்த வழியே திருப்பி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்துள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
மது போதையில் அசுர வேகத்தில் இயக்கப்பட்ட லாரி சுங்கசாவடியில் கவிழ்ந்து விபத்துஷ
காவல்துறையின் சோதனை காரணமாகவே லிப்ட் ஆப்பரேட்டர் உயிரிழந்ததாத கூறி, அவரது உறவினர்கள் பழைய மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நீடித்த நிலையில் காவல் துறையினருக்கும், உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக காவல்துறையினர் கூறியும் அவர்கள் கலந்து போகாத நிலையில் காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை; புதுவையில் பதற்றம்
இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கா பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.