சங்கரன் கோவில் அருகே கோ மருதப்பபுரத்தில் காணாமல் போன 85 வயது மூதாட்டி மலையாங்குளம் அருகே உள்ள கண்மாயில் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப் பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ மருதப்புரத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி புஷ்பம்(வயது 85). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள வளர்ப்பு மாடுகளுக்கு உணவு எடுப்பதற்காக வயல் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் காணாமல் போன புஷ்பம் குறித்து புகார் அளித்தனர்.
தொடர்ந்து சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மலையாங்குளம் நாரந்தை கண்மாயில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த குருவிகுளம் காவல்துறையினர் நாறாந்தை கண்மாயில் ஆங்காங்கே தெரு நாய்கள் கடித்து குதறி இழுத்துச் சென்று போட்ட உடல் பாகங்களின் எலும்புக்கூடுகளாக சிதறி கிடந்ததை கைப்பற்றினர்.
“செந்தில் பாலாஜி கைது” தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல வேலைகளை செய்வார்கள் - சீமான் கருத்து
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன கோ மருத கோபுரத்தைச் சேர்ந்த புஷ்பம் என்ற மூதாட்டி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து எலும்பு கூடுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மூதாட்டியின் உடல் பாகங்கள் எலும்புக்கூடுகளாக ஆங்காங்கே சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
30க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்ற வெறிநாய்கள்; விவசாயிகள் வேதனை