மத்திய அரசின் அழுத்தத்தால் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின், அக்கட்சியின் தலைவர், வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் அழுத்ததால் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை நடத்தப்படுவது இந்திய இறையான்மைக்கு பங்கம் விளைவிக்கும் மோசமாக செயல் இதை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்து வருவதாகவும், அதே கூட்டணியில் எதிர்வர உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நெல்லை மாநகர பகுதிகளில் விவசாய தேவைக்காக உள்ள பாளையம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை அரசு தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றவாறு பாளையம் கால்வாயை பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் சுத்தம் செய்யப்பட்ட விஷ நீர் என்று குற்றம்சாட்டிய வேல்முருகன், எந்த வித தரக்கட்டுப்பாடும் டாஸ்மாக் மதுபானத்திற்கு இல்லை என்பதால் தமிழக முழுவதும் பூர்ண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் இன்றி நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
தொடர்ந்து பேசிய அவர், உள்ளுரில் இருப்பவர்களுக்கு டோல் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருந்தும் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் உள்ளுர் ரவுடிகளை வைத்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தாக்கப்படுவதாகவும், அதை தென்மண்டல ஐஜி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வருமான வரி செலுத்தும் குடும்ப தலைவிகளை தவிர்த்து அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்க வேண்டும் என அப்போது வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தாஅர். எதிர்வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என தெரிவித்தார்.