சென்னையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாநில அரசு தான் தேர்வு செய்தது. அங்கு நடைபெறும் மக்கள் பிரச்சினைகளை மாநில அரசு தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணைஅமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் மற்றும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தார். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இடத்தை தேர்வு செய்து தந்தால் அதற்கான பணிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய புதுமண தம்பதி
தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் விமான நிலையத்தை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை பசுமை வழிச்சாலையாக மாற்றும் செய்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் சிபிரசாத் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. அதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. மக்களின் போராட்டம் குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ள வேண்டும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பணிகள் மீண்டும் தொடரும் என தெரிவித்தார்.