குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரநாராயணர் கோவிலின் 125 அடி ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு கோவில் யானை மற்றும் பக்தர்கள் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கேலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரநாராயணர் திருக்கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற திருத்தளங்களில் ஒன்றாகும்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
அதன்படி குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவிலின் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் தேசிய கொடியானது ஏற்றப்பட்டது. அதே மேலும் கோவில் நுழைவு வாயில் அருகிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில்,கோவில் யானை கோமதி கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
மேலும் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கலந்து கொண்டு, யானைக்கும் அங்கு கூடியிருந்த மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். 125 அடி ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.