தென் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி; சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை சோதனை ஓட்டம்

By Velmurugan s  |  First Published Sep 21, 2023, 1:47 PM IST

சென்னை, திருநெல்வேலி இடையே நாளை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.
 


தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருநெல்வேலி, சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வருகின்ற 24ம் தேதி தொடங்க உள்ளது. 24ம் தேதி காலை 11.30 மணியளவில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் மொத்தம் 8 பெட்டிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 652 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். தினமும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும்.

Latest Videos

undefined

திடீரென டயர் வெடித்து புளியமரத்தில் மோதிய தனியார் பேருந்து; 30க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த ரயில் காலை 7.15 மணிக்கு விருதுநகர், 7.50 மணிக்கு மதுரை, 8.40 மணிக்கு திண்டுக்கல், 9.55 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது. மணிக்கு சுமார் 83.30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இதே போன்று மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு 6.45 திருச்சி, 7.55 திண்டுக்கல், 8.45 மதுரை வழியாக இரவு 10.40 மணிக்கு மீண்டும் திருநெல்வேலியை வந்தடைகிறது. வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக வந்தேபாரத் ரயில் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு; உறவினர்கள் கதறல்

இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நாளை காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து தொடங்குகிறது. மறு மார்க்கத்தில் பகல் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது பயணிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ரயில் எல்லையை அடைகிறதா என்ற அடிப்படைியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் ரயில் பயணத் தொகை, முன்பதிவு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

click me!