தென்காசியில் காவல்நிலைய எழுத்தர் வெட்டி படுகொலை; சினிமா பாணியில் நடைபெற்ற கொலையால் பொதுமக்கள் அச்சம்

By Velmurugan s  |  First Published Jun 8, 2024, 4:18 PM IST

சங்கரன்கோவில் அருகே காவல் நிலைய சுருக்கெழுத்தர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வின்துரை என்பவரது மகன் பெரியதுரை (வயது 30). இவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்தார். இதே ஊரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரது மகன் அருண்குமார் (28). இவர் காதலித்த பெண்ணை பெரியதுரையின் உறவினர் அல்லித்துரை என்பவர் திருமணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால் அல்லித்துரைக்கும், அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், இன்று காலையில் அல்லித்துரையை தொலைபேசியில் தொடர்புகொண்ட அருண்குமார், உன்னிடமும் உனது உறவினர் பெரியதுரையிடமும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறியபடி பெரியதுரையை அழைத்துக்கொண்டு கல்லத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அல்லித்துரை சென்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

காவிரியை தூய்மை படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல்; சிறிதும் தாமதிக்காதீர்கள் - தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை

தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்ற அருண்குமார், செல்போனில் உள்ள வீடியோவை பார்க்குமாறு பெரியதுரையிடம் கூறியுள்ளார். அவர் வீடியோவை பார்த்தபோது, அரிவாளால் அவரை அருண்குமார் வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அல்லித்துரை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

வீட்ல வேற ஒன்னுமே இல்ல போ சாமி; காட்டு யானையை பேசிய வழி அனுப்பிய தோட்ட தொழிலாளி

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!