தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடந்த 24 மணிநேரமாக பலத்த மழை பெய்கிறது. நேற்று மதியம் திருநெல்வேலி பகுதியில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. மாலையில் சாரல்மழை பெய்து வெப்பத்தை தனித்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை மூன்றுமாதங்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்து ஜனவரியில் நிறைவடைந்தது. அதன்பிறகு பனிக்காலம் தொடங்கிய நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வந்தது. பகல்நேரங்களில் வெயில் வாட்டிவதைக்கவே கோடைகாலம் போல வெப்பம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முதல் தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.
undefined
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடந்த 24 மணிநேரமாக பலத்த மழை பெய்கிறது. நேற்று மதியம் திருநெல்வேலி பகுதியில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. மாலையில் சாரல்மழை பெய்து வெப்பத்தை தனித்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று தொடங்கிய மழை, இரவு மற்றும் அதிகாலையிலும் நீடித்து இன்றும் தொடர்கிறது. நேற்று இரவு சிவாலயங்களில் சிவராத்திரியை மக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க திடீர் மழை மக்களை உற்சாகப்படுத்தியது.
ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது அங்கு பெய்து வரும் திடீர் கோடை மழை வெப்பத்தை தனித்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.