அதிகாலையில் கோர விபத்து..! பழுதாகி நின்ற கார் மீது படுவேகத்தில் மோதிய சொகுசு பேருந்து..! 3 பேர் பலி..!

By Manikandan S R S  |  First Published Feb 17, 2020, 11:37 AM IST

சிவகிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு காருடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தென்காசி நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது குடும்பத்தினருடன் நாகப்பட்டினத்தில் இருக்கும் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக ஒரு காரில் அனைவரும் வேளாங்கண்ணி சென்றிருந்தனர். பின் மீண்டும் ஊருக்கு அதே காரில் நேற்று இரவு திரும்பினர்.

Tap to resize

Latest Videos

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே இன்று அதிகாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் வெடித்து விடவே, மற்றொரு காரில் குடும்பத்தினரை சேகர் கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின் சிவகிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு காருடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தென்காசி நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

இதில் சேகர், ராஜசேகர் உட்பட 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தவழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

click me!