டிக்கெட் கேட்ட நடத்துனரை கொடூரமாக தாக்கிய போலீஸ்... ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ வெளியிட்டு கதறல்..!

By vinoth kumar  |  First Published Sep 30, 2019, 4:12 PM IST

நெல்லையில் பயணச் சீட்டை காட்டச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை போலீஸ்காரர்கள் இரண்டு பேர் ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடத்துனரை தாக்கிய போலீஸ்காரர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெல்லையில் பயணச் சீட்டை காட்டச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை போலீஸ்காரர்கள் இரண்டு பேர் ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடத்துனரை தாக்கிய போலீஸ்காரர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து நேற்று மாலை புறப்பட்டது. அந்த பேருந்தில் நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ் (50) என்பவர் நடத்துனராக உள்ளார். இந்த பேருந்தில் சீருடையில், ஆயுதப்படை காவலர்கள் மகேஷ், தமிழரசன் மற்றும் கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். பேருந்தின் நடத்துனர் ரமேஷ் அனைவரிடத்திலும் பணத்தை வசூலித்து பயணத்துக்கான ரசீதுகளை வழங்கி வந்தார்.

Latest Videos

undefined

இதனிடையே, ஆயுதப்படை காவலர்களிடம் பயண ரசீதை வழங்கப் நடத்துனர் பணம் கேட்டுள்ளார். ஆனால், தாங்கள் அரசு வேலைக்காகப் பயணிக்கும் வாரண்ட் உள்ளதாகக் காவலர்கள் பதிலளித்துள்ளனர். இதையடுத்து, நடத்துனர் சரி அந்த வாரண்ட்டை என்னிடம் காண்பிக்கவும் எனக் கூறியுள்ளார். காண்பிக்கிறோம் என்ற வகையில் பதிலளித்த காவலர்கள், நேரம் கடந்த போதும் அதை காட்டவில்லை.

இதனையடுத்து, மீண்டும் வாரண்டை கேட்ட போது நடத்துனருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ்காரர்களில் ஒருவர் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், நடத்துனருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதை கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இதைச் சற்றும் எதிர்பார்க்காத நடத்துனர் ரமேஷ், பேருந்து ஓட்டுநரை காவல் நிலையம் செல்லும்படி அறிவுறுத்தினார். அரசுப் பேருந்தில் காவல் நிலையம் சென்ற நடத்துனர் ரமேஷ் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் தமிழரசன் மற்றும் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார். பின்பு போலீஸ்காரர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கண்டக்டரை போலீஸ்காரர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!