உதயமானது புதிய தென்காசி மாவட்டம்..!

By Manikandan S R SFirst Published Nov 22, 2019, 10:43 AM IST
Highlights

திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் இன்று உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அரசாணை வெளியாகி புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் திருநெல்வேலியில் இருந்து பிரிந்து உருவாகியிருக்கும் தென்காசி மாவட்டத்தின் தொடக்க இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவாகியிருக்கும் தென்காசியில் 8 தாலுகாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

click me!