சீவலப்பேரி பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் முண்டத்தேவர். திருநெல்வேலி, பாளையம்கோட்டைக்கு அருகில் உள்ள சீவலப்பேரியில் வசித்து வந்த அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
சிலரால் தூண்டிவிடப்பட்டு முன்சீப்பை கொலை செய்து சிறை சென்றவர் சீவலப்பேரி பாண்டி. பிறகு உண்மை தெரியவந்து சிறையில் இருந்து தப்பித்து தன்னை தவறு செய்யத் தூண்டிய முதலாளிகளை கொலை செய்து விட்டு காலதுறையினரின் தோட்டாவுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொடுத்து உயிரிழந்தவர் சீவலப்பேரி பாண்டி.
இவரது வாழ்க்கை வரலாறு குறித்து சீவலப்பேரி பாண்டி என்கிற திரைப்படமும் வெளியானது. சீவலப்பேரி பாண்டியின் நெருங்கிய தோழர்கள் இரண்டு பேர். முண்டத்தேவர், முருகதேவர். இதில் முருகத்தேவர் காவல்துறையில் பணியாற்றியவர். சீவலப்பேரி பாண்டி படம் எடுக்கும் போதும், விகடனில் தொடராக வந்தபோதும் எழுத்தாளரும், இயக்குநரும் முண்டத்தேவரை சந்தித்து பல உண்மைகளை கேட்டறிந்த பின்பே எழுதியும், படமாகவும் வெளியிட்டனர்.
சீவலப்பேரி பாண்டியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் முண்டந்தேவர். திருநெல்வேலி, பாளையம்கோட்டைக்கு அருகில் உள்ள சீவலப்பேரியில் வசித்து வந்த அவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.