73 வது சுதந்திர தினம் , 73 அடி தேசிய கொடி , 73 தேசிய தலைவர்கள் - எல்லாமே " 73 ".. நெல்லையில் மாணவர்கள் அசத்தல் ..

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 8:07 AM IST

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் சாதனையில் ஈடுபட்டனர் .


நெல்லையில் சிவராம் கலைக்கூடம் இயங்கி வருகிறது . இங்கு மாணவர்களுக்கு  ஓவியம் போன்ற கலைகள் கற்றுக்கொடுக்க படுகின்றன . இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவர்களை வைத்து ஒரு சாதனையை செய்ய நிர்வாகம் முடிவு செய்தது . 

Tap to resize

Latest Videos

73  அடியில் பெரிய தேசிய கொடி செய்யப்பட்டது  . பின்னர் அதில் விடுதலைக்கு பாடுபட்ட 73  தேசிய தலைவர்களின் உருவ படங்கள் வரையப் பட்டன . அதை பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பிடித்து பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டது .

நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் எல்லாமே 73 இல் செய்யப்பட்டிருந்தது சிறப்பம்சமாக இருந்தது . அது காண்போரை அதிகம் கவர்ந்தது .

மாணவர்களின் இந்த சாதனை முயற்சியை பொதுமக்கள் பெரிதும் வியந்து பாராட்டினர்.

click me!