தலைகீழாக பறந்த தேசிய கொடி ...!! சங்கரன்கோவிலில் பரபரப்பு ...

Published : Aug 15, 2019, 02:24 PM ISTUpdated : Aug 15, 2019, 02:29 PM IST
தலைகீழாக பறந்த தேசிய கொடி ...!! சங்கரன்கோவிலில் பரபரப்பு ...

சுருக்கம்

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுர உச்சியில் தேசிய கொடி தலைகீழாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .  

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயண சுவாமி கோவில் பிரசித்து பெற்றது . இங்கிருக்கும் ராஜகோபுரத்தின் உச்சியில்  சுதந்திர தினம் , குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம் .

அதேபோல , சுதந்திர தினமான இன்று காலையில் கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி பறந்தது . ஆனால் வழக்கத்துக்கு மாறாக தலைகீழாக பறக்கவிடப் பட்டிருந்தது . இதனால் அங்குள்ள பொதுமக்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது . பின்னர் கோவில் நிர்வாகத்திடம் கூறப்பட்டு உடனே சரி செய்யப்பட்டது . 

ஆடித்தபசு திருவிழாவின் இறுதி நாளான இன்று கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது .

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்