பைக் ரேஸரா .... வாங்க எலும்பு முறிவு பிரிவ சுத்தி பாக்கலாம் !! - நெல்லை காவல்துறையின் விநோத கவனிப்பு

By Asianet Tamil  |  First Published Aug 15, 2019, 12:37 PM IST

பைக் ரேஸில் ஈடுபட்ட 11 இளைஞர்களை நெல்லை காவல்துறையினர் எலும்பு முறிவு நோயாளிகளையை சந்திக்க வைத்தனர் .


பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுவதுண்டு . அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது .  இவர்களால் அப்பாவி பொதுமக்களும் பல சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும்  சம்பவங்கள் நடந்து வருகின்றன .இதனை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் .

Tap to resize

Latest Videos

undefined

அதன் ஒரு பகுதியாக நெல்லை காவல்துறை வித்தியாசமாக செயல்பட்டனர் . நெல்லை மாநகர பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட 11 பேரை பிடித்த போலீஸார், அவர்களிடம் இருந்து 4 அதிவேக பைக்குகள் பறிமுதல் செய்தனர்  . பின்னர் அவர்கள் 11 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர் . விபத்துக்குள்ளாகும் நபர் எத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் , அவர்கள் குடும்பம் எவ்வளவு  பாதிப்படைகிறது என்பதை மருத்துவர் சேது மூலமாக நேரில் அறிந்து கொள்ளச் செய்தனர் .

இதையெல்லாம் தெரிந்துகொண்ட 11 பெரும் இனி பைக் ரேஸில் ஈடுபடுவதில்லை என்று போலீசாரிடம் உறுதி அளித்தனர் .

நெல்லை காவல்துறையின் இந்த பொறுப்பான நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

click me!