பெரும் ரயில் விபத்தை் தவிர்த்த தம்பதிக்கு வெகுமதி வழங்கி ரயில்வே மேலாளர் பாராட்டு

By Velmurugan s  |  First Published Mar 2, 2024, 12:27 PM IST

தென்காசி மாவட்டம் புளியரைப் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் டார்ச்லைட் அடித்து பெரும் ரயில் விபத்தை தவிர்த்த தம்பதியினருக்கு ரயில்வே சார்பில் வெகுமதி வழங்கி பாராட்டு


தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின் போது, அந்த வழியாக வந்த சிறப்பு ரயிலை டார்ச்லைட் அடித்து நள்ளிரவு நேரத்தில் நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த புளியரைப் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவியான வடக்குத்திஅம்மாள் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது சாமர்த்திய செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் அந்த தம்பதியினரை நேரில் அழைத்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் கைது; மருத்துவ அறிக்கையால் அம்பலமான நெஞ்சுவலி நாடகம்

இதனைதொடர்ந்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தபா தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்திற்கு சண்முகையா மற்றும் அவரது மனைவியை அழைத்து வந்து பெரிய அளவிலான விபத்தை தடுத்த தம்பதியினருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ரூ.20 ஆயிரம வெகுமதி வழங்கி பாராட்டினார். அவருடன் பல்வேறு ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடன் வந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

click me!