நெல்லை கனமழை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்

By SG Balan  |  First Published Dec 18, 2023, 3:53 PM IST

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரம் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.


நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரம் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்துவருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கட்டுகள் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக நெல்லை வெள்ளக்கோயில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு அவசர கால கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் சிலர் தன்னார்வலர்களாக தங்கள் படகுகளின் மூலம் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இருப்பினும் தற்போதைய நிலையில் குறைவான படகுகளே இருப்பதால் படகு மூலம் மக்களை விரைவாக மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து படகுகள் வரழைக்கப்படுகின்றன.

இதனிடையே அடுத்த 24 மணிநேரத்திற்கும் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், மக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்... பிரதமரைச் சந்திக்க நேரம் கோரிய முதல்வர் ஸ்டாலின்

click me!