ஷேக் முகமதுவின் ஆட்டுப்பண்ணைக்குள் வெறிநாய்கள் சில புகுந்துள்ளன. அங்கிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியது. மேலும் ஒரு ஆடு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது(56). விவசாயியான இவர் ஆடு பண்ணை அமைத்து செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீடு அமைத்திருக்கும் பகுதியில் ஏராளமான வெறி நாய்கள் சுற்றி திரிகின்றன. அங்கு வளர்க்கப்படும் ஆடு, கோழிகள் போன்றவற்றை நாய்கள் கடித்து கொன்றுவிடுவதாக மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் ஷேக் முகமதுவின் ஆட்டுப்பண்ணைக்குள் வெறிநாய்கள் சில புகுந்துள்ளன. அங்கிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியது. மேலும் ஒரு ஆடு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. ஆடுகள் பலியாகி கிடப்பதைக்கண்டு கண்டு அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது, காயமடைந்து கிடந்த ஆட்டை சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
சம்பவம் குறித்து ஷேக் முகமது மற்றும் அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்துள்ளனர். வெறிநாய்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆடுகள் உயிரிழந்ததற்கு இழப்பீடு தொகை அரசு சார்பாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!