சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செயல்பட்ட வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பிற்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2021ம் ஆண்டு வி.எம்.சத்திரம் பகுதி இளைஞர்களால் தொடங்கப்பட்ட டெவலெப்மெண்ட் டிரெஸ்ட் அமைப்பானது தொடர்ந்து சுற்றுசூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தேசத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் சிறுவர்களுக்கான சுற்றுசூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.
தாமிரபரணி நதி சீரமைப்பு:
நீர்நிலைகள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, 7.4 கி.மீ தொலைவில் தாமிரபரணி நதிக்கரையை சீரமைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். குளங்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, பேரிடர் காலங்களில் நிவாரண உதவி, குழந்தைகளுக்கான சுற்றுச்சுழல் விழிப்புணர்வு முகாம், சமூக வலைதளங்களில் சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு, குறுங்காடு வளர்த்தல், வீதி தோறும் மரக்கன்று வளர்த்தல், நந்தவனம அமைத்தல், தாய்மடி திட்டம், மரவங்கி திட்டம், பனை விதைத்தல் என பல்வேறு சுற்றுச்சுழல் சார்ந்த தளங்களில் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
10 லட்சம் மக்களை கொன்று இந்தியா - பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது? சத்குருவின் கேள்வியும், பதிலும்
இந்த நிலையில் நாட்டின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியதை பாராட்டி தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வி.எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பிற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்களுக்கு மாவட்ட சுதந்திர தின விழாவில் வழங்கினார்.