தாய் எதிர்ப்பையும் மீறி காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் எதிர்ப்பையும் மீறி காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மன்னராஜா வடக்கு தெருவை சேர்ந்தவர் அமராவதி. இவரது கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்ட நிலையில் தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகள் அபி கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் தூரத்து உறவினர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.
இதனிடையே, மகளின் காதல் விவகாரம் அறிந்த அமராவதி கண்டித்தார். மேலும் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மாணவி, காதலனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இடையன்குடி சாலையில் உள்ள காதலன் சந்தோஷ் வீட்டில் தஞ்சமடைந்தார்.
மகளை காணாது பெற்றோர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிய அஞ்சனா, காதலன் சந்தோஷ் வீட்டுக்கு அவர் சென்று விட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்தார். பெத்தெடுத்து ஆளாக்கிய நம் சொல்லை கேட்காமல் காதலனுடன் ஓடிவிட்டாளே என தாய் கதறினார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை திசையன்விளை பகுதியில் மகள் அபி படத்துடன் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இரவோடு இரவாக ஊர் முழுவதும் போஸ்டரை ஒட்டியுள்ளனர். காலையில் இதனை பார்த்த அவரது உறவினர்களும், சக மாணவிகளும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.