அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது.. போக்குவரத்து கழகம் அதிரடி? பொதுமக்கள் அதிர்ச்சி.!

By vinoth kumarFirst Published May 22, 2023, 11:07 AM IST
Highlights

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிக்கையில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூ.2000 நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டராக இருக்கும்.

அரசு பேருந்துகளில் வரும் 23ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும் போது பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு நெல்லை போக்குவரத்து கழகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:- இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிக்கையில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூ.2000 நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகப்பட்சமாக ரூ.20 ,000 வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- ரூ.2000 நோட்டுகளை வாங்காதீங்க! வாங்கினால் இதுதான் கதி! டாஸ்மாக் நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு..!

இதனால், ரூ.2000 நோட்டுகளை அரசு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நாளை முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூறி பயணிகளிடம் இருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக பொது மேலாளர்கள், அனைத்து கிளை மேலாளர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். மேலும் தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் ரூ. 2000 நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!

click me!