கடனை திரும்ப கட்ட முடியவில்லை; கடன் பெற்றவரின் மகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - தமிழகத்தை உலுக்கும் தேனி

By Velmurugan s  |  First Published May 30, 2024, 7:31 PM IST

தேனியில் தந்தை வாங்கிய கடனுக்காக அவரது மகளை கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மணி என்பவரிடம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடன் வாங்கி சிறிது நாட்கள் கடந்த நிலையில், அந்த நபரால் உரிய பணத்தை மணியிடம் திரும்ப செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணி கடன் வாங்கிய நபரின் மகளை கடத்த சில நபர்களை தூண்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கடன் வாங்கியவரின் 19 வயது மகள் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பெண்ணை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் காரிலேயே மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்த நிலையில், இது தொடர்பாக வெளியில் கூறினால், வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

நொடிப்பொழுதில் போர்க்களமான டவுண் ரதவீதி; அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - நெல்லையில் பரபரப்பு

இதனால் செய்வதறியாது அப்பெண் தவித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் அனைத்தும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்போது தேனி பெரியகுளம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தென்கரையைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி உள்ளிட்டோர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது அழைத்தாலும் வரவேண்டும்; TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேனியில் தந்தை வாங்கிய கடனுக்காக இளம் பெண்ணை கடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

click me!