கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் கொலைவெறி தாக்குதல் - அண்டை வீட்டார் வெறிச்செயல்

Published : May 27, 2024, 04:23 PM ISTUpdated : May 27, 2024, 04:24 PM IST
கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் கொலைவெறி தாக்குதல் - அண்டை வீட்டார் வெறிச்செயல்

சுருக்கம்

தேனியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் பெண் உள்பட மூவரை அண்டை வீட்டார் தனது உறவினர்களுடன் இணைந்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு சசிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் கழிவுநீர் செல்வதில் இரண்டு குடும்பத்திற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று பாலமுருகன் மனைவி ஜெயலட்சுமி, சசிக்குமார் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது சசிக்குமார் வீட்டிற்கு மஞ்சுனூத்து கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் குமரேசன், அபிமன்யூ, விக்னேஷ், மனோஜ், மதன் ஆகியோர் வந்துள்ளனர். தனது உறவினரான சசிக்குமார் குடும்பத்தினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய அண்ணன் வாசககுமார், மாமா மாலியன் ஆகியோரை ஆபாசமாக பேசி, கம்பு, கட்டை, கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர். 

மகள்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்க குட்டைக்கு அழைத்து சென்ற தந்தை; மகள்களோடு பிணமாக வீடு திரும்பிய சோகம் - கோவையில் பரபரப்பு

இந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த காட்சியில் ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி, கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை கைது செய்தனர். 

டேய் மச்சான் ஓடு டா ஓடு; மூணாறு சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய படையப்பா

மேலும் படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி, வாசககுமார், மாலியன் ஆகியோர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட பாவிங்களா! ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு கணவர் போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
500 ஆண்டு பழமையான கோயில் அபகரிப்பு: அமைச்சரின் மாஜி உதவியாளருக்கு எதிராக சீறிய மக்கள்