தேனியில் காதலியின் திருமணத்தை நிறுத்த காதலியின் தந்தையை கத்தியால் குத்திய காதலன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இரு இளைஞர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியைச் சேர்ந்த சுருளிராஜ் என்பவரது மகள் சுபாஷினி. இவரை போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஷினியை அவரது வீட்டில் வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க சுருளிராஜ் முடிவெடுத்துள்ளார்.
காதலியின் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டால் திருமணம் நின்று விடும் என்று எண்ணி காதலியின் தந்தை சுருளிராஜை கார்த்திக் மற்றும் அவரது நண்பரான சுகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து 16.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த காதலியின் தந்தை சுருளிராஜை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
undefined
அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கல்வி சீர் வழங்கி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய கிராம மக்கள்
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சுருளிராஜ் தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராமல் பாலியல் இச்சையை வெளிப்படுத்திய உறவினர்; கோவையில் பரபரப்பு
மேலும் நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இருவரும் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் மெய் காவல் சிறை தண்டனை விதித்து தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.